தமிழ் மின்னணு புத்தகம் – நிஹால் ஸ்ரீ அமரசேகர

அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒரு சிலரிடையே பூர்த்தியடையாத பேராசையினிமித்தம் மோசடியான முறையில் பொது வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதனால் அநேகருடைய அடிப்படை தேவைகளுள் ஒன்றான வாழ்வாதாரத்திற்கான உரிமை மறுக்கப்படுவதும் இழிவான வறுமை நிலைக்கு அடிப்படை காரணமாக அமையவில்லையாஇப்படியிருக்க வறிய மக்களை காட்டிலும் சமூக அரசியல் அதிகாரம் கொண்டவர்களால் மக்களின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் முகமாக மூல காரணங்கள் தைரியமாக  தீர்வுகாணப்படக்கூடியதாயும்,  கடுமையாக செயற்படுத்தப்படவும் கூடாதாஅநீதியான கொள்ளையிடப்பட்ட வளங்களை கொண்டுள்ள மக்களை மீளீடு செய்யூம் வறுமையை நீக்கும் செயற்திட்டங்களை விடவும், அப்படியான வளங்களை கொண்டுள்ளோர் கொடுக்கும் நன்கொடைகளின் நிமித்தம் பொது இடங்களில் மதத்தலைவர்களால் வெள்ளையடிக்கப்படுகின்றதை பார்க்கிலும்  இது அதிக முக்கியம்  அல்லாவா?

 இந்நடவடிக்கைகளானது இறுதியாக சமூக அநீதிக்கும் மனித உரிமை மீறலுக்கும் தொடர்ந்து அதே மக்களின் வளங்களை ஒருங்குபடுத்தி போராடவேண்டிய பயங்கரவாதத்தினை தூண்டும் சமூக வன்முறைகளுக்கும் வழிவகுக்காதா?

நிஹால் ஸ்ரீ அமரசேகர

நவம்பர் 23 2016

 

சாராம்சம் மீதான விமர்சனம்

இந்த சாராம்ச புத்தக தொடர்களானது நேரமும், உள்ளார்ந்த ஆராய்ச்சியூம் செய்ய முடியாத நிலையிலுள்ள பொதுநிலை நபர்களினால் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் ஆசிரியரினால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த சாராம்சத்தில் சாதாரணமான ஒருவர் செய்ய அஞ்சும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பிலான முழுமையான புத்தகங்களின் விபரங்களும் மிகத்தெளிவாக சேர்க்கப்பட்டுள்ள ஆதாரங்களுடனான தகவல்களும் வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுவதாக அமையும். மிகவும் பாராட்டத்தக்க, சமூகத்திற்கு நன்மை பயக்கும் எழுத்தாளரின் இந்த சேவையானது  நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆபத்தான சுழலை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் எமது சமுதாயம் வாழ்வதற்கு ஒரு நல்ல சுழலை உருவாக்குவதில் நிறைவுபெறவேண்டும். எனவே இந்த சாராம்சத்தை  அனைவரும் வாசித்து நடைமுறையில் உள்ள சமூக அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்டு ஒரு சிலரின் செயற்பாடுகளால் சமூகத்தில் பரவிவரும் புற்றுநோயை எதிர்த்து இல்லாதொழிக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

மேற்கோள்

கொள்கை இல்லாத அரசியல், பண்புகள் இல்லாத கல்வி மனிதம் இல்லாத விஞ்ஞானம், அறநெறி இல்லாத வர்த்தகம் என்பன பிரயோசனமற்றவை மாத்திரமல்லாது, நேர்முகமான ஆபத்தானதாகும்.
- ஸ்ரீ சத்திய சாய் பாபா -

நிஹால் ஸ்ரீ அமரசேகர

FCA, FCMA, சக CMA, CGMA, CFE,

அங்கத்தவர் – அமெரிக்க சட்ட தரணிகள் சங்கம், ஒருங்கிணைப்பாளர் – சர்வதேச ஊழல் எதிர்ப்பு அதிகாரிகள் சங்கம், முன்னாள் குழு உறுப்பினர் – சர்வதேச அரச நிதி முகாமைத்துவ சங்கம்

Share this post


You cannot copy content of this page